உலக உணவு தினம்

 

உலக உணவு தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உலக உணவு தினம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பசியை ஒழிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு ஒரு வலுவான குரலை வழங்குகிறது.

1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூற நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள்உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்என்பதாகும்.உலக உணவு தினம் ஏன் முக்கியமானது?

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். 2020- ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடக்கத்தக்கது. உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. அதையும் தாண்டி ஊட்டச்சத்து உணவுகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது இதன் குறிக்கோளாகும். உலகில் அதிக அளவு உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வித்தத்தில் சர்வதேச உணவு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இது அமெரிக்காவை சேர்ந்த நார்மன் போர்லாக் முயற்சியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நம் நாட்டில் பட்டினியால் சாகும் உயிர்களை விட மந்தமான விவசாயத்தில் பாதிக்கப்பட்டு உயிர்விடும் விவசாயிகளே அதிகம் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. உலக உணவு தினம், உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசி, பட்டினிக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. உலக உணவு தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல, பசி, பட்டினியற்ற உலகத்தை உருவாக்க நாம் எடுக்கும் முதல் படி.

Written By: –

 

 

 

 

Rtr. Darmika Savunthararasa
(Junior Blog Team Member 2024-25)

Edited By: –

 

 

 

 

Rtr. Moksha Munasinghe
(Junior Blog Team Member 2024-25)

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments