காலாண்டு சாராம்சம் – முதல் காலாண்டு 2020/21

முதல் காலாண்டுக்கான சிறு-நினைவூட்டல்: 

சிறப்பான சாதனைகள்

E-RYLA- நாட்டின் முடங்கலின் போது RYLA ஐ மெய்நிகரில் நிகழ்த்தும் சவாலை ஏற்று மாவட்டம் 3053 மாபெரும் வெற்றியை கண்டது. இவ் வெற்றியானது பல்வேறு கழகங்களில்  இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவரின் பங்கேற்பால் நிரூபிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் ரோட்டராக்ட் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, ரோட்ராக்டர் தரிந்தி தரம்வர்தன “ஆத்மனிர்பர்” ல் முதலிடத்தையும், ரோட்ராக்டர் விசுல  “ஹேப்பி ட்ரெயில்ஸ்” பணியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

UNPFA புகைப்படக்கலை போட்டி – ரோட்ராக்டர் ஜெனிஃப் ஜமீல், கொழும்பில் உள்ள தெருக்களின் அழகைக் கவர்ந்து, இப்போட்டியில்மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

Maestro – மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் ரோட்டராக்ட் கழகம் ஏற்பாடு செய்த இந்த முயற்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் எழுபத்தைந்து அணிகள் பங்கேற்றன. ரோட்ராக்டர் அர்ஷட், ரோட்ராக்டர் சசெனி,  ரோட்ராக்டர் ஹரித் மற்றும் ரோட்ராக்டர் லகித் RACUOCFMF ஐ பிரதிநிதித்துவப்படுத்தி, தொடர்ந்தும் 3 வது முறையாக வெற்றியை அடைந்து பாரம்பரியத்தை காப்பாற்றினர்.

இவ் அணி பிரபலமான அணியாக அங்கீகரிக்கப்பட்டதுடன், ரோட்ராக்டர் சசெனி “Best Pitcher” என்னும் விருதையும் பெற்றுக்கொண்டார்.

AVENUES

[smartslider3 slider=”194″]

ஆரம்பயக்

திட்டம் ஆரம்பயக் ’20 RACUOCFMF இல் மற்றொரு முக்கியமான ஆண்டின் முடிவையும், புதிய நம்பிக்கைகள் மற்றும் உறுதிப்பாட்டின் தொடக்கத்தையும் குறித்தது. புதிதாக நியமிக்கப்பட்ட கழக தலைவர் ரோட்ராக்டர் ஆமினா இஸ்மாயில் மற்றும் செயலாளர் ரோட்ராக்டர் குலனி சல்கடோ ஐ வாழ்த்தி RACUOCFMF இன் இன்னொரு பரவசமான ஆண்டிற்காக, நான்கு முக்கிய மதக் கோட்பாடுகளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறும் நோக்கில் திட்டம் “ஆரம்பயக்” ஜூலை மாதம் 4 ஆம் திகதி நடைபெற்றது.

உலகளாவிய தொற்றுநோயால் எதிர்கொள்ளப்பட்ட அனைத்து தடைகளுக்கும் மத்தியில், இத் திட்டத்தில் சில ஆர்வமுள்ள உறுப்பினர்கள் முழுக்கழகத்தின் வருகையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பம்பலபிட்டியவில் உள்ள வஜிரா கோவில், “மேத்தராமயா” விகாரை பம்பலப்பிட்டிய, செயின்ட் மேரி தேவாலயம் பம்பலப்பிட்டி மற்றும் இறுதியாக “தேவதகஹா ஜும்மா மஸ்ஜித் ” ல் வழிபாட்டில் இணைந்தனர்.

ஒரு பயணத்தின் தொடக்கத்தில், சிறிய தயவான செயலானது பிறரை உயர்த்துவதுடன் எம்மையும் உயர்த்தும் என்ற உண்மையான நம்பிக்கையுடன், நல்வாய்ப்பற்றவர்களுக்கு மதிய உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

Stop the Spread – Beyond COVID-19

கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் ரோட்டராக்ட் கழகம் COVID-19 ன் பரவலை தடுக்க இரண்டு கட்ட திட்டமொன்றை கையெடுத்தது.  இத்திட்டம் பொது விழிப்புணர்வை உருவாக்குவதிலும் பரவுவதை நிறுத்த, தடுக்க மற்றும் தொற்று சூழலை ஏற்றுக்கொள்ள தனிப்பட்ட பயிற்சியை வழங்குவதிலும் கவனம் செலுத்தியது.

முதலாம் கட்டம் – Do Not Forget. Do Not Fear

முதல் கட்டமானது தொற்று சூழல் குறித்த தலைப்புகளில் சமூக வலைத்தளங்களில் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆக்கபூர்வமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. இக் கட்டத்தின் கீழ் செய்யப்பட்ட அனைத்து இடுகைகள் மற்றும் காணொளிகள் கழகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல், YouTube மற்றும் Instagram பக்கங்களில் வெளியிடப்பட்டன. இவை தொற்றை சித்தரிக்கும் ஓவியங்கள் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் மும்மொழி காணொளிகளையும் உள்ளடக்கியது.

இரண்டாம் கட்டம் – Stop the Spread

இரண்டாம் கட்டமானது ஹபரக்கடையில் உள்ள தடிகமுவ வித்தியாலயத்தில் தரம் 9, 10 மற்றும் 11 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு COVID-19 தொற்றுநோயின் முக்கிய அம்சங்கள் குறித்து அத்தியாவசிய பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தியது. முன்பே மருத்துவர்களிடமிருந்து பெறப்பட்ட மிகவும் பொருத்தமான தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய சூழலில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் புதிய இயல்புக்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை மாற்றி ஆரோக்கியமாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் பயிற்சியில் உள்ளடக்கப்பட்டன.

[smartslider3 slider=”195″]

Induction’20

RACUOCFMFஇன் வருடாந்தர induction, 2020 ஆகஸ்ட் 06 ஆம் திகதி புதன்கிழமை zoom வழியாக நடைபெற்றது.மிகுந்த உற்சாகம் கொண்ட 140 க்கும் மேற்பட்ட மாணாக்களின் மெய்நிகர் பங்கேற்புடன் காலை 10 மணியளவில் அமர்வு தொடங்கியது. 2 மணி நேரம் நீடித்த இந்த திட்டம் உறுப்பினர்களுக்கு றோட்டறக்ட் இயக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய சுருக்கமான நுண்ணறிவு வழங்கப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தருணம் நிகழ்ச்சி நிரலில் அடுத்தது,  அனைத்து உறுப்பினர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு தங்களை அறிமுகப்படுத்தும் ஒரு குறுகிய காணொளிகளை உருவாக்கி பின்னர் அவை திரையில் காண்பிக்கப்பட்டன, பின்னர் சில அற்புதமான ஆன்லைன் விளையாட்டுகள் நடாத்தப்பட்டன. அணிகள் புத்துணர்வுடன் போட்டியிட்டு, இறுதி வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.‘ஒவ்வொரு நல்ல காரியமும் முடிவுக்கு வர வேண்டும்’ என்று சொல்வது போல, ஓர் புதிய பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் அற்புதமான இந்நிகழ்வு புதிய உறுப்பினரான ரோட்ராக்டர் கயான் ஜெயசிங்க வழங்கிய பின்னூட்டத்துடன் நிறைவுற்றது.

[smartslider3 slider=”196″]

Mind the Gap

Rotaract Club of DYP ACS of RID 3131 மற்றும் மாவட்டத்தின் பல கழகங்களுடன் RACUOCFMF of RID 3220உம் இணைந்து  Mind the Gap என்ற முன்முயற்சியை தொடங்கியுள்ளோம். இந்த முயற்சி  செப்டம்பர் 27, 2020 அன்று நடைபெற்ற உலக சுற்றுலா தினத்தை கொண்டாட உலகெங்கிலும் உள்ள அனைத்து ரோட்டராக்டர்களும் தங்களுக்கு பிடித்த, Covid தொற்றுக்கு முந்தைய பயண நினைவுகள் அல்லது சாகசங்களை பகிர்ந்து கொள்ள ஒரு பொதுவான தளத்தை வழங்கியது. அழகான விளக்கத்துடன் பகிரப்பட்ட படங்கள் பங்கேற்ற கழகங்களின் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன.

[smartslider3 slider=”197″]

Know Your Rights

முதலாம் கட்டம்.

“Know your Rights” என்பது மனித உரிமைகள் மற்றும் அவற்றின் நடைமுறை பயன்பாடுகளை பற்றிய ஒரு கல்வி மெய்நிகர் அமர்வாகும். இந்நிகழ்ச்சியின் விருந்தினர் பேச்சாளர், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளர் செல்வி.தனுஷ்கா மேதவத்தா, மீறப்படும் மிக முக்கியமான மனித உரிமைகள் பற்றி எடுத்துரைத்தார். ஆகஸ்ட் 08 ஆம் தேதி zoom மற்றும் facebook live வழியாக இந்த அமர்வு நடத்தப்பட்டது.பேச்சாளர் மனித உரிமைகள் என்ன என்பதை விரிவாக விளக்கினார், மேலும் இதுபோன்ற மனித உரிமைகளின் வரலாற்றையும் தொட்டார். அமர்வின் போது பல வரலாற்று எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டதால் பங்கேற்பாளர்கள் இறுதிவரை இணைந்திருந்நனர். நவீன நாட்களில் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் Black lives matter அவர் பயன்படுத்திய சரியான எடுத்துக்காட்டுகளில் ஒன்று.

இரண்டாம் கட்டம்.

இலங்கையில் தொழிலாளர் சட்டத்தின்  பாத்திரங்கள், முக்கியத்துவம் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து சமூகத்திற்கு கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் zoom மற்றும் Facebook live வழியாக 13 செப்டம்பர் 2020 நடைபெற்ற ஒரு கல்வி அமர்வு Know your rights இன் இரண்டாம் கட்டமாகும். அமர்வை  கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளரான திரு. சர்வேஸ்வரன் வழங்கினார். இலங்கையில் தொழிலாளர் சட்ட மீறல்கள் பற்றி பலர் கேள்விப்படாமல் போகின்றார்கள் என்று கூட விளக்கலாம்.தொழிலாளர் சட்டத்தை மையமாக கொண்டு RACUOCFMF மேற்கொண்ட இவ்வமர்வில் இலங்கையில் வேலைவாய்ப்பு ஒப்பந்தம், தொழிலாளர் தகராறுகள் மற்றும் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், பணிநீக்கம் மற்றும் அதன் வகைகள் ஆகிய தலைப்புகள் விளக்கப்பட்டன. கேள்விகளுக்கு தளம் திறக்கப்பட்ட போது பங்கேற்பாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகள் அமர்வின் வெற்றியை காட்டும் வலுவான குறிகாட்டியாக அமைந்தது.

SUSTAINABLE DEVELOPMENT GOALS COVERED

இந்த முதற்காற்பகுதியில் எமது ரோட்டரக்ட் அமைப்பின் மூலம் கீழ்வரும் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட்டன.

ROTARY FOCUS AREAS COVERED


கீழ்வரும் பகுதிகள் முதற்காலாண்டு காலப்பகுதியில் RACUOCFMF செயற்திட்டங்கள் மூலம் நிறைவு செய்யப்பட்டன.

CLUB ACHIEVEMENTS

RACUOCFMF இனால் அடையப்பட்ட சாதனைகள்
பொதுக்கூட்ட எண்ணிக்கைகள்: 03
இயக்குனர் குழு கூட்ட எண்ணிக்கைகள்: 03

Rotaractors of the Months

Rtr. Abirshanaa Raj – July
Rtr. Chathuni & Thirandi – August
Rtr. Ravisha & Shehani – September

DISTRICT PARTICIPATION

நெக்ஸ்ட் ஸ்டெப் – 2020-21 ஆம் ஆண்டின் ஜனாதிபதிகள் மற்றும் செயலாளர்களுக்கான கூட்டுறவு அமர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.COVID-19 இன் பலவீனமடைந்த தாக்கம் முன்னைய தலைவர்களின் வெளியேறுதலுக்கான நேரத்தினை அதிஷ்டவசமாக்கியது. ரோட்டரக்ட் மாவட்ட வழிநடத்தல் குழு 2020/21 மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முகாமை மற்றும் நிதி பீடத்தின் ரோட்டரக்ட் கழகம் உள்ளிட்ட சில ரோட்டரக்ட் கழகங்களுடன் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.“நெக்ஸ்ட் ஸ்டெப்” 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வத்தளயின் பெகாசஸ் ரீஃப் ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாவட்ட சட்டமன்றம் – 30 வது வருடாந்த ரோட்டரக்ட் மாவட்ட சட்டமன்றம் 2020 ஜூலை 4 ஆம் திகதி கோல்டன் ரோஸில் நடைபெற்றது. எதிர்பாராத சில நிகழ்வுகள் காரணமாக மாவட்ட வழிநடத்தல் குழு மாற்றத்தை தழுவி, சுகாதார வழிகாட்டுதல்களின் படி இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை ஏற்பாடு செய்தது. ரோட்டரக்டர்கள் பெரும்பாலானோர் மெய்நிகர் தளம் வழியாக பங்கேற்றதால் இது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியது.கழகங்களின் தொடர்ச்சியான கடின உழைப்பிற்காக பல விருதுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட சபை கூட்டங்கள் (ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர்) – ரோட்டரக்ட் மாவட்டம் 3220 இன் 2020/21 ஆண்டுகளுக்கான மாவட்ட சபை மற்றும் வழிநடத்தல் குழுவின் மாதாந்த உத்தியோக பூர்வ கூட்டம் டி.சி.எம் என பொதுவாக அறியப்படுகிறது. முந்தைய மாதம் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிய பார்வையை கழகங்களும், மாவட்டமும் அனைத்து பங்கேற்பாளர்களிடமும் பகிர்வதற்கான தளமாக டி.சி.எம் அமைகின்றது.

வயம்ப தோழமை பயணம்- செப்டம்பர் 05 ஆம் திகதி வயம்ப தோழமையில் இணைந்த ரோட்டரக்டர்கள் அதிகாலையில் ரேஸ்கோர்ஸ்க்கு வந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். வயம்ப பல்கலைக்கழகத்தின் ரோட்டரக்ட் கழகத்தின் 2 ஆவது நிறுவல் விழாவில் பங்கேற்ற பின் அனைவரும் அதுகல்புர பாறையை பார்வையிட சென்றனர். பின்னர் ஹோட்டல் ப்ளூ ஸ்கையில் அதுகல்புர மற்றும் குருநாகலின் ரோட்டரக்ட் கழகங்களிலின் நிறுவலுக்காக  இணைந்தனர்.

பதுளை தோழமை  பயணம்- சிறந்த நண்பர்களுடன் 3 நாள் தோழமை பயணம் என்பது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய ஒன்று. நமுனுகுல மலைத்தொடரில் ஒரு நடைபயணத்துடன் தொடங்கிய பதுளை தோழமை விஜயத்திற்கு வருகை தந்த ரோட்டரக்டர்கள் ஊவா-வெல்லச பதுளை பல்கலைக்கழகத்தின் ரோட்டரக்ட் கழகம் மற்றும் இரத்தினபுரவின் ரோட்டரக்ட் கழகங்களின் நிறுவல் விழாக்களில் பங்கேற்றனர்.

யாலுவா பயிற்சி அமர்வு – உலக மனநலிவு நோய் தினத்தை முன்னிட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இப்பயிற்சி திட்டம் பங்கேற்பாளர்களுக்கு, மனநலிவு நோய் உள்ளவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய விதம் மற்றும் கையாளும் விதம் பற்றிய விளக்கத்தை வழங்கியது.

CLUB PARTICIPATION


நாங்கள் கீழ் குறிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டோம்.

[smartslider3 slider=”189″]

For the English Article click on :  https://bit.ly/37TqDj1

For the Sinhalese Article click on : https://bit.ly/3maNADq

Written By:-
Blog Team [2020/21]

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments