காலாண்டு சாராம்சம் – மூன்றாம் காலாண்டு 2019/20

மூன்றாம் காலாண்டுக்கான சிறு-நினைவூட்டல்: 

சிறப்பான சாதனைகள்

 

– Speech Craft – Rotaract மாவ‌ட்ட‌ம் 3220 இல் சர்வதேச Toastmaster ஆனது Rotaract கழகத்துடன் இணைந்து முதற்கட்ட செயற்திட்டமாக Join Speech Craft நிகழ்ச்சித்திட்டத்தை நடத்தியது. இவ் நிகழ்ச்சி திட்டமானது சுமா‌ர் 10 கிழமைகள், 50 Rotaract கழக உறுப்பினர்களுடன் நடைபெற்றது. கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட Rotaract கழகத்தில் இருந்து Rtr. Arshad Sufi Ismail, Rtr. Dilhari Dias ம‌ற்று‌ம் Rtr. Aamina Ismail என்போர் இந் நிகழ்ச்சி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

– Rotaract Champion League – Overall 4th Place – முதற்தர 5 Rotaract Champions League இலும் பீடங்கள் அடிப்படையில் கலந்து கொண்டது, கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட Rotaract கழகம் மட்டுமே ஆகும். பெண்களுக்கான குண்டெறிதலில் Rtr. Pamudee Salpadoru முதலாம் இடத்தையும், Rtr. Sajini நான்காவது இடத்தையும் பெற்றனர். ஆண்களுக்கான கயிறு இழுத்தலில் மூன்றாம் இடத்தையும் பெண்களுக்கான கயிறு இழுத்தலில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். சதுரங்க போட்டியில் Rtr. Sajini இரண்டாவது இடத்தையும் பெண்களுக்கான Tag Rugby அணியானது இர‌ண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

– Rotary Youth Leadership Awards 2020 – இந்த வருடம் தை மாதம் 25ம் 26ம் திகதிகளில் RYLA அதாவது Rotary Youth Leadership Award 2020 CHE சாகச பூங்காவில் நடந்தேரியது. இதில் Rtr. Shehani Leo அவர்களின் Ketchup அணி RYLA 2020யினை கைப்பற்றியது.

– Virtual Quarantine Quiz Competition – Overall 1st Place – 31.03.2020 இல் கொழும்பு பல்கலைக்கழக ச‌ட்ட பீட Rotaract கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வினா விடை போட்டியில் (சுமா‌ர் 75  போட்டியாளர்கள் கலந்து கொண்ட) Rtr. Aloka Weerawrdane முதலாம் இடத்தைப்பெற்றார்.

 

AVENUES

 

[smartslider3 slider=166]

 

WORLD DOWN SYNDROME DAY 2020

World Down Syndrome Day ஐ கொண்டாடும் முகமாக இவ் வருட மாவட்ட செயற்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட Rotaract கழகத்தினால் காலங் காலமாக நட‌த்தப்ப‌ட்டு வருவதை போன்று இவ் வருடம் அமைந்தது. ஒரு நா‌ளி‌ல் இந் நிகழ்வானது 3 பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தது. Down Syndrome உ‌ள்ள 300 குழந்தைகளுக்கு இது ஒரு சுவாரஸ்யமான ம‌ற்று‌ம் பயனுள்ள நாளாக அமைந்தது. பிரிக்கப்பட்ட 3 பிரிவாக மருத்துவ முகாம்களை உள்ளடக்கியிருந்தன. அ‌தி‌ல் குழந்தைகளுக்கு பிசியோதெரபி அமர்வு, பல விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவ‌ர்களது திறமைகளை வெளிப்படுத்த அவர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பாக இது அமைந்தது. அனைத்து குழந்தைகளுக்கும் தினசரி அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டத்துடன் பலவித விளையாட்டு, நடனம் மூல‌ம் இ‌ந்த நாள் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாகவும் திருப்திகரமானதாகவும் மாற்றப்பட்டது.

 

[smartslider3 slider=167]

 

HIGH FIVE – PHASE 01

High Five Phase 01 ஆனது RACUOCFMF கலண்டர்ஆண்டில் மிகவும் களியூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இது கிதுல்கலவின் சாகச முகாமில் நடத்தப்பட்ட ஒரு தலைமைத்துவ பயிற்சி முகாம் ஆகும். முதலாவது நாளில் “Codweb Odysses”, “குழாயை சமநிலைப்படுத்தல்” ம‌ற்று‌ம் “கம்பளிப்பூச்சி நடை” போன்ற பல வேடிக்கையான நிகழ்வுகள் நடைபெற்றன. களனி நதியில் புத்துணர்வூட்டும் ஒரு குளியலை முடித்த பின் நதியின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பாறையின்  மீது நெருப்பு மூட்டி அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். அந்த இரவினை மேலு‌ம் சுவாரஸ்யமானதாக மாற்ற நட்சத்திர பாடகர்களின் இசை மற்றும் நல்ல உணவு வழங்கப்பட்டது. 8 நாட்கள், கீழ்நோக்கி வேகமாக பாயும் நீரோடை வழியாக படகுகளில் நாம் பயணம் செய்தோம். அதில் இறுதி இரு நாட்களும் நம்மால் மறக்க முடியாத நா‌ட்களாக அமைந்தது.

ALOHA

ALOHA 2020 – Hawaiian விருந்தானது தை மாதம் 31/2019 அ‌ன்று மாலை 6 மணியளவில் ராஜகிரியவில் உள்ள Beacon – Resolute இல் நடைபெற்றது. இதனை 2019/2020 ஆம் ஆண்டின் Rotaract மாவட்டம் 3220 ஐச் சேர்ந்த 4 கழக குழுக்களினால் ஒழு‌ங்கு படுத்தப்பட்டிருந்தது. உண்மையான உடைகள் மற்றும் மலர் மாலைகள் அணிந்தவர்களால் இன்னிசைக்கு ஏற்ற நடனத்துடன் “ALOHA” விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். இங்கு வழக்கமான பல விளையாட்டுகளும் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டிருந்து.

Rtr. Lahiru Perera மற்றும் Rtr. Shelisha Mendis ahiya Ja-Ela / Kandana Rotract கழகத்தை சேர்ந்தவர்கள் முறையே ALOHA ராஜா மற்றும் ராணியாக முடிசூட்டப்பட்டனர்.

EPIPHANY

High Five திட்டத்தின் இரண்டாவது கட்டமாக Epiphany கலாசார ஆலோசகர் ம‌ற்று‌ம் மென்மையான திற‌ன் பயிற்சியாளர் திரு. Altaf Ahamed அவர்களால் நடத்தப்பட்ட அமர்வு காணப்பட்டது. இவ் அமர்வானது சுய விழிப்புணர்வை மையமாக கொண்டிருந்தது எ‌னினு‌ம் அனைவருக்கும் எளிதாக விளங்கும் வகையில் இதனை சிறு துணை தலைப்புகளாக பிரித்தார். சில முக்கிய விடயங்களை பற்றி விளக்கமாக கூறியதுடன் பல குழு நிகழ்வுகளை நடத்தினார். இ‌தி‌ல் அவர்கள் அமர்வில் கற்றுக்கொண்டதை பயன்படுத்த வேண்டும். Bollywood இல் நடன பயிற்சியாளராக இருந்த Mr. Altaf Ahamed பங்கேற்பார்களை சிறந்ததொரு பாடலுக்கு நடனமாட செய்ததுடன் அமர்வை நிறைவு செய்தார்.

BOARD TRIP

Board Trip ஆனது பங்குனி மாதம் 12 மற்றும் 13ஆம் திகதி 2020 இல் ரஸ்கீன் தீவில் உ‌ள்ள Bolgoda கரையில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள The Bliss Villa வில் நடந்தது. இ‌ந்த பயணத்தின் நோக்கமானது 2019/2020 ஆம் ஆண்டிற்கான செயற்குழு ம‌ற்று‌ம் இயக்குனர் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூல‌ம் இலாபகரமான பயனை அடைவதாகும். மாலை நேரமானது தொடர்ச்சியான உரையாடலுடன் காணப்பட்டது. பின்னர் இனிமையான பாடலுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது. மறுநாள் காலை கட‌ந்த Rotaract ஆண்டு எப்படி இருந்தது எ‌ன்பதை பிரதிபலிக்கும் ஒரு வேடிக்கையான உரையாடல் இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய அனைத்து உறுப்பினர்களாலும் பல நிகழ்வுகள் மிகவு‌ம் அழகாக நினைவூட்டப்பட்டது.

 

[smartslider3 slider=168]

 

R-EVOLUTION

R-Evolution ஆனது Rotaract Club of Dr. D.Y. Patil Vidya Pratishthan Pune, India – RID 3131 இனால் ஒழுங்கமைத்து Rotaract Club of University of Colombo, Faculty of Management and Finance உடன் இணைந்து நடாத்தப்படும் தொழில்நுட்பமற்ற ஒரு வினாவிடை போட்டியாகும். இது கடந்த பெப்ரவரி மாதம் 7ம் திகதி பிற்பகல் 1 மணி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. போட்டியானது குழுவினை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. ஒவ்வொரு குழுவும் 2 உறுப்பினர்களை கொண்டமைந்து காணப்பட்டது. இவர்கள் 40 பொது மற்றும் நுண்ணறிவு வினாக்களை கொண்டமைந்த வினாத்தாளினை 1 மணித்தியாலத்திற்குள் விடையளிக்க வேண்டும். 40 வினாக்களும் 4 விடைகளைக் கொண்ட பல்தேர்வு வினாக்களாக இருந்தது. மூன்றாம் இடத்தை Gayathri Hatthotuwa & Lahiru Maduwantha உம் இரண்டாம் இடத்தை Ashkar Ajward & Joel Mark பெற்றுக் கொண்டனர். Arshad Sufi Ismail & Oshadi Dias ஜோடி முதலாம் இடத்தைத் தட்டிக் கொண்டது. அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பலத்த உட்சாகத்துடன் கொளரவிக்கப்பட்டனர்.

 

[smartslider3 slider=169]

 

CREATOR WITHIN YOU

பணிமனையின் நோக்கமானது Adobe Photoshop பற்றிய அறிவினை பங்குபற்றிய அங்கத்தவர்களுக்கு வழங்குவதோடு. அதனை ஏவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் இதன் துறைசார்ந்த வல்லுனராகிய திரு. சாமாக ரணசிங்க அவர்கள் மூலம் வழங்கப்பட்டது. இவர் IKON Impressions நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி ஆவர் இவர் ஒவ்வொரு அங்கத்தவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் எடுத்து இது தொடர்பான  கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இந்த பணிமனையின் இறுதியில் Photoshop தொடர்பான பூரண  அறிவு இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

BRAND YOURSELF

இந்த அமர்வனது அங்கத்தவர்களிடையே தமது தனித்தன்மைக்கான முக்கியத்துவத்தையும் அதனை உருவாக்குவதற்கான வழி முறைகளையும் எமது வளவாளர் ஆகிய திரு. ஷித்தக குனவர்த்தன அவர்களால் மிகவும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.  இதன் போது தனிநபரின் குறிக்கோள்கள், வாழ்க்கையின் நோக்கம், தனிநபர் வளர்ச்சி என்பன இந்த அமர்வில் கலந்துரையாடப்பட்டன. அத்தோடு இந்த கலந்துரையாடலுக்கன உதாரணங்கள் பார்வையாளர்களுக்கு இடையில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டது ஒரு சிறப்பம்சம் ஆகும்.

SKY IS THE LIMIT

இந்த சுவாரசியமான அமர்வில் எம்முடன் உரையாற்ற இலங்கையின் சிறந்த கிரிக்கட் வீரரும், சமூக  ஆர்வளரும், சிறந்த ஊக்குவிப்பாளரும்  ஆகிய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. மகேல ஜெயவர்த்தன வருகை தந்து இருந்தார். இந்த உரையாடலின் போது  பார்வையாளர்கள் மத்தியில் ஒரு இனம் புரியாத ஒரு உற்சாகம் காணப்பட்டது. அத்தோடு இந்த உரையாடலில் திரு. மகேல ஜெயவர்த்தன அவரின் குழந்தை பருவமும்  இளமை பருவமும்  அவருக்கு அளித்த அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அத்தோடு அவரின் புற்றுநோய் ஒழிப்பு மையம் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உருவான வரலாற்றையும் எம்முடன் பகிரிந்து கொண்டார். எம் வாழ்வினை தாங்கி நிற்கும் கருத்துக்களையும் எங்களுடன்  பகிர்ந்து கொண்டார். மற்றும் இந்த நிகழ்வின் இறுதி அம்சமாக சபையோரின் கேள்விகளுக்கு திரு. மகேல ஜெயவர்த்தன மிகவும் ஆர்வதோடு பதில் அளித்தார் ,அத்தோடு நிகழ்வு முடிவடைந்தது.

LIGHTS. CAMERA. ACTION.

இது வீடியோ எடிட்டிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்துறை தரமான மென்பொருளான DaVinci Resolve 16 ஐப் பயன்படுத்தும் திறன்களை கற்பித்தல் மற்றும் வளர்க்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு பட்டறை.  இலவசமாக நடத்தப்பட்ட இந்த பட்டறை, கற்க ஆர்வமுள்ள  இளைஞர்களுக்கு, இந்த மென்பொருளைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கியது. இளைஞர்கள் கார்ப்பரேட் உலகிலும், பிற தொழில்களிலும் பயன்படுத்தக்கூடிய அவர்களின் வீடியோ எடிட்டிங் திறன்களை வளர்க்க அவர்களுக்கு உதவியது.  மென்பொருளைப் பற்றி 360 டிகிரி பார்வையை வழங்குவதன் மூலம், இது மிகவும் பயனுள்ள அமர்வு என்பதை பட்டறையின் நடத்துனரான திரு. ருஸ்னி ஃபைக் உறுதிப்படுத்தினார்.

 

நிதி சேவை

 

YUMMILICIOUS

இது கொழும்பு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் நிதி பீடத்தில் நிதி திரட்டும் உணவுக் கடை, ஆசிரிய ஆசிரியர்களின் எம்பிஏ மாணவர்களைக் குறிவைத்து நடைபெற்றது.

 “Glass Ice 5.0” இன் ஆரம்ப செலவுகளை ஈடுசெய்யும் வகையில் நிதி திரட்டும் நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், கோவிட் -19 தொற்றுநோயால் “Glass Ice 5. 0” ஐ ரத்து செய்ய வேண்டியிருந்ததால், அந்த நிதி “Minisath  Pawura ”திட்டத்துக்கு ​​வழங்கப்பட்டது. தெஹிவளை மற்றும் கல்கிசை பகுதிகளில் கிட்டத்தட்ட 80- 100 குறைவான சலுகை பெற்ற குடும்பங்களை ஆதரிப்பதற்கான சமூக சேவை  கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திட்டம்.  கிட்டத்தட்ட அனைத்து உணவுப் பொருட்களும் வெறும் 4 மணி நேரத்திற்குள் விற்கப்பட்டதால் இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

“நீங்கள் செய்ய வேண்டியதை ஒரு நல்ல நோக்கத்துடன் செய்யுங்கள்.  உங்கள் செயல்கள் எப்போதும் இலக்கை கண்டுபிடிக்கும்.”

 

PUBLIC RELATIONS HIGHLIGHTS

 

COUNT YOUR BLESSINGS

COVID-19 lock-down இன் போது ஆரம்ப நாட்களில் மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட எதிர்மறையான மற்றும் நிச்சயமற்ற எண்ணங்களினை நல்ல எண்ணங்களாக மாற்றி மக்களிடையே நல் எண்ணங்;களை பரப்பும் நோக்கில் அமைக்கப்பட்ட திட்டமே இதுவாகும். நாங்கள் இவ் நல் எண்ணங்களை புகுத்த Instagram கதைகளுக்கான Templates இனை உருவாக்கினோம்.இது பங்கேற்பாளர்களை அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கவும் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இக் காலகட்டத்தில் அவர்கள் கற்றுக்கொண்டவை, சந்தோசப்படுத்திய நினைவுகள் மற்றும் எவருக்கோ எதற்கோ அவர்களின் நன்றி செலுத்தும் நினைவுகளினை இவ் Instagram இனூடாக பகிர்ந்து கொண்டார்கள். 150 இற்கும் மேற்பட்ட பெறும் பிரதிபலிப்பு, நேர் சிந்தனையையும் சந்தோசத்தினையும் பங்கேற்பாளர்களுக்கு மாத்திரம் அன்றி சமூக வலைத்தளங்களினூடாக வாசிப்போருக்கும் பகிரக்கூடியதாக இத்திட்டம் அமைந்தது.

EACH FOR EQUAL

Each for Equal இச் சுருக்கமான கானொலியானது மங்கையர் தினத்தை கொண்டாடுவதற்கு “ஒவ்வொருவருக்கும் சமன்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இக் கானொலியானது கூறும் மையக் எண்ணக்கரு என்னவென்றால் சமூகத்தில் உள்ள அனைவரும் முக்கியமானவர்கள் மற்றும் எவ்வித பாலின வேறுபாடுஃ பல்லினத்தை பொருட்படுத்தக்கூடாது என்பதாகும். இக் குழுவில் ஆண்களும் பெண்களுமாக சேர்த்து 16 உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

 

Sustainable Development Goals Covered

கீழ்வரும் அபிவிருத்திகள் இந்த 3ம் கால் ஆண்டில் எமது கழகத்தினால் நிறைவு செய்யப்பட்டது.

 

Rotary Focus Areas Covered

கீழ்வரும் பகுதிகள் இந்த 3ம் கால் ஆண்டில் எமது கழகத்தினால் அடையப்பட்டன.

 

CLUB ACHIEVEMENTS

பொது கூட்டங்கள் : 04
நிர்வாக சபை கூட்டாங்கள் : 03
Rotaractors of the Month  :

Rtr. Dulan Prabashana & Rtr. Dilani Perera – January
Rtr. Nuzhath Rizvi – February
Rtr. Oshadi Dias – March
Rotaractor of the Quarter : Rtr. Harith Lokugamage

 

DISTRICT PARTICIPATION

Rotaract – Toastmaster Speech Craft Program – Rotaract ம‌ற்று‌ம் சர்வதேச Toastmaster ஆல் முதன்முறையாக ஒ‌ன்றாக நடத்தப்பட்ட  திட்டமாக இது அமைந்தது. Rotaract கழக அங்கத்தவர்களின் பேச்சு, த‌லைமை, திட்டமிடல் போன்ற திறமைகளில் கவனம் செலுத்தப்பட்டது. 

Rotary International District 3220 Intercity Meeting – இது மாசி மாதம் 17 ஆம் திகதி 2020 அன்று கொழும்பின் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் Rotary சர்வதேச தலைவர் Rtn.Mark Maloney மற்றும் Rotary முதற்பெண்மணி Gay Maloney, புகழ்பெற்ற Rotary கழக அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர். வழக்கமான சம்பிரதாயங்கள் மற்றும் கூட்டுறவுடன் தொடங்கிய இந்நிகழ்வின் சிறப்பம்சமாக Rotary மற்றும் சர்வதேச Toast Masters இணைந்து Speech craft program ஆரம்பிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம்.

Rotary Youth Leadership Awards 2020 – இது 2 நாட்களை கொண்ட தலைமைத்துவ பயிற்சி பாசரையாகும். இதில் ஏறத்தாழ 90 ரொட்ரக்டர்ஸ் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு Rotary Club Of Colombo Mid Town யினால் ஏற்பாடு செய்யப்பட்டது. Rtr.Shehani Leo மற்றும் Rtr. Piyumi Abeywardhana எமது களகம் சார்பாக இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். Rtr. Afraa Mohamed சிறந்த RYLARIAN ஆக தேர்வு செய்யப்பட்டதோடு, Rtr. Keith Mehta பிரபல்லியமான RYLARIAN ஆகவும் தேரிவு செய்யப்பட்டார். இந்த நிகழ்சியின் மூலம் எமது தலைமைத்துவ திறன்கள் வெளிக்கொணரப்பட்டன அத்தோடு எமது நபர்களுக்கு இடையிலான கூட்டுரவும் மேம்பட்டமை பாராட்டதக்க விடயமாகும்.

Road Safety Awareness Program – சாலைப்பாதுகாப்பு குறித்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக Rotary மாவட்டம் 3220 ஆல் ‘சாலைப்பாதுகாப்பு வாரம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இது 2020 தைமாதம் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது. இலங்கை அறக்கட்டளை மண்டபத்தில் 21 ஆம் திகதி நடைபெற்ற நுண்ணறிவு அமர்வில் Rtr.Shehani Leo, Rtr.Kethni Wijesinghe, Rtr.Saseni Wejegunawardana, Rtr.Nadeera Ratnayake மற்றும் Rtr.Nikhil Senadheera ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

CLUB PARTICIPATION

மூன்றாம் காலாண்டில் ஏனைய கழகத்தினால் நடத்திய பின்வரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டோம்.

  • 3×3 Championship 2020 – RACFOLUOC
  • Wella Pongal – RAC Wellawatte
  • Rangoli – RAC Centennial United
  • Future Proof – RAC Kelaniya
  • IR Bolah 2020 – RAC Colombo Midtown & RAC Colombo West
  • Hat Trick 2020 – RAC Colombo Fort
  • Hotdog Showdown – RAC IIT
  • Midtown Picnic – RAC Colombo Midtown
  • Cook Off – Cluster 05
  • Paduru Party – RAC USJ
  • Enigma 2020 – RAC KDU
  • Know Your SDGs – RAC Centennial United & RAC Colombo Midtown
  • My Rotaract Story – RAC USJ
  • Real Life Superheroes – RAC Colombo Midtown
  • Virtual Open Mic Night – RAC Colombo West
  • Quarantine and Chill Art Competition – Rotaract Clubs of Badulla, Colombo Fort, ICBT, MSI, Nallur, Kurunegela, University of Peradeniya
  • Hand Wash Challenge – RAC IIT

 

For the Sinhalese Article click on : https://rcuocfmf.com/2020/06/කාර්තුමය-සාරාංශය-තෙවන-කා.html

For the English Article click on : https://rcuocfmf.com/2020/06/quarterly-round-…-quarter-2019-20.html

 

Written By:

 

Rtr. Nithiananthan Arushan
( Club Member – 2019/20 )

Rtr. Jeniff Jameel
( Club Member – 2019/20 )

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments