விட்டு பிரிந்த மனமே..

இதயம் எனும் கண்ணாடியில்

விழுந்தது உனது விம்பம்,

சற்று நெருங்கும் முன்னே

விட்டு விலகியது உன் நெஞ்சம் .

சிரிப்பு இருந்த இடத்தில்

சிதரியுள்ளது என் உள்ளம்,

காதல் நிறைந்த கண்களில்

வழிந்துள்ளது என் கண்ணீர்..

நீ விட்டு சென்ற பாதையிலே

அலைமோதுகிறது நம் நினைவுகள்,

நீ வருவாய் என் காத்திருந்து காத்திருந்து

ஏமாற்றம் அடைகிறது என் உள்ளம்.

நாம் பேசிக்கொண்ட இரவுகள்

நட்சத்திரங்களை விட நீளமானவை,

உன் சிரிப்பு கேட்டால்

என் எல்லா கவலைகளும்

மௌனமாகி விடும்.

அப்போது எனக்குத் தெரியவில்லை…

சந்தோஷம் இவ்வளவு அமைதியாக

விடை சொல்லி போகும் என்று.

மெல்ல மெல்ல உன் வார்த்தைகள் குறைந்தன,

பதில் வரும் நேரம் நீளமானது,

நான் மட்டும்

அதே அன்போடு காத்திருந்தேன்.

“பிஸி” என்ற ஒரு சொல்லில்

என் இடம் சுருங்கியது,

“பின்னர் பேசலாம்” என்ற வாக்கியத்தில்

என் முக்கியத்துவம் மறைந்தது.

நீ மாறினாய் என்று இல்லை,

நான் தேவையற்றவனாக

மாறினேன் –

அதுதான் உண்மை.

நான் நினைக்கவில்லை

உன் பிரிவு இவ்வளவு துயரத்தை தரும் என்று

உன்னை மறக்க முயற்சிக்கவில்லை,

ஏனெனில் மறத்தல் அவ்வளவு எளிதல்ல.

பிரிவு சொல்லாமல் போனாய்,

ஆனால் என் வாழ்க்கைக்கு

நீண்ட மௌனத்தை எழுதி சென்றாய்…

சில இரவுகளில்

உன் பெயரை சொல்லிக்கொண்டே

கண்ணீர் விழுகிறது,

அது காதலுக்காக இல்லை,

என்னை இழந்ததற்காக.

நீ இல்லாத வாழ்க்கைக்கு

நான் பழகிக்கொண்டு இருக்கிறேன்,

ஆனால்

நீ இருந்த வாழ்க்கையை

மனம் இன்னும் விட மறுக்கிறது.

ஒரு நாள்

நீ என் நினைவாக மட்டும் மாறுவாய்,

நான் என் வலியை

வலிமையாக மாற்றிக்கொள்வேன்.

அன்று புரியும்

பிரிவு முடிவல்ல,

தன்னைத் தேட தொடங்கும்

ஒரு நீண்ட பயணம் என்று….

 

Written By: –

 

 

 

 

Rtr. Ilaxshana Rajeshkanth
(Junior Blog Team Member 2025-26)

 

Design By: –

 

 

 

 

Rtr. Kawindra Wickramasinghe
(Junior Blog Team Member 2025-26)

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top