விலைமகளின் காதல் கதை

 

மானுட நரனின் அற்புத சிந்தனையின்

அடித்தளத்தில் உதித்து வானுயர

வளர்ந்துக் கொண்டிருந்த வர்ண

கட்டிடம் அது. அந்த வர்ணங்களுக்கு

பின்னால் விலைமதிப்பற்ற ஓர்

விலைமகளின் கனவுகள் கண்ணீரில்

கரைந்து கொண்டிருந்தது. ஆம்

உங்கள் எண்ணங்கள் தவறல்ல. அவள்

பல ஆண்களின் வலியை சுமந்துக்

கொண்டு உடற்பசி தீர்க்கும் ஓர்

விலைமாது. இரவுகளில் மஞ்சங்களில் இறந்து பிழைப்பவள்.

நம் கதாநாயகி ஓர் இளம்வயது விலைமகள். அந்த நடமாடும்

ஓவியத்தின் பெயர் எழிலரசி (அதாவது விலைமகள் எழிலரசி)

பெயருக்கேற்றார் போல் செதுக்கப்படாத சிலை. பல உரிகளின்

வலிதாங்கிய சிலையவள். அளவான எடை பொதுவான நிறம்

செவ்விதழ்களில் ஓர் போலிப்புன்னகை என்றாலும் அது அழகுதான்.

கயல்விழியாள் அழகை கூற கவிதைகளும் நடுங்கும். இருப்பினும்

விலைமகளாயிற்றே எனவே இந்த வர்ணனை போதும்

இரவில் ஆடவர்களுக்கு தேவதையாய் தெரிபவள் பகலில் மட்டும்

விபச்சாரி, ஒதுக்கப்பட்டவள், அசிங்கமாம் என்ன ஒரு கேவலமான

உலகம் இது.அத்தனை அவமானங்களும் செவிவழி சென்று உயிரை வதைக்கும்

எனினும் மெளனமே அவள் பதில். யாரறிவார் அவள் பிறப்பிலே

விலைமகள் என பச்சை குத்தப்பட்டு வளர்ப்பிலே பல ஆண்களின்

 

காமப்பார்வைகளுக்கு உள்ளாகி பதினைந்து வயதிலே விலைமதிப்பற்ற

அவள் மெய்யழகை பேரம்பேசி விற்கப்பட்டவள் என. இதனை எப்படி

தன்னை அசிங்கப்படுத்தம் மானிட அரக்கர்களிடம் கூறுவாள். அவளை

விற்றவள் தன்னை பெற்றவளாயிற்றே.

பிறப்பிலிருந்தே அந்த கட்டிடத்தையும் அங்குள்ள சக

விலைமகள்களையும் கொடூர ஆண்களையும் பார்த்தே வளர்ந்தாள்.

வெளியுலக அறிவோ அறைகளுக்குள்ளே முடக்கப்பட்டது.

பெண்பிள்ளைகளின் ஆடை மறைக்கும் தாய்களுக்கிடையில் அங்கம்

தெரிய ஆடையை விலக்கிவிடும் பெற்றவள். ரத்த நிற உதட்டுசாயம்

மேகக்கூந்தல் மறைக்கும் பூக்கள் இதெல்லாம் இவளின் விலையை

நிர்ணயிக்கும் ஒப்பனைகளாம்.

யாரறிவார் அவள் விலைமதிப்பற்ற மனதை ஒருவனை தவிர வேறு

யாராலும் வாங்க முடியாதென. ஆம் ஒரு விலைமகளின் காதல்

கதைதான் இது.

 

தன்னை பெற்றவளுக்கு தெரியாமல் கட்டிடத்திலிருந்து – வேகமாக

வெளியேறி கொண்டிருந்தாள் எழில். தன்னை யாரும் கவனிக்கும்

முன் அரைமணிநேரம் சரி கோவில் சென்று தன் பாரத்தை

ஆண்டவனிடம் சொல்ல கோயில் நோக்கி விரைந்தாள் அவள்

செல்லும் வழியிலே தன் பத்து வருட காதலை பூக்கடையில்

பார்க்கிறாள். ஒருதலை காதல்தான் என்றாலும் தீராத காதல்

அவனுடன். அவன் பெயர் கதிரவன்.ஆறடி உயரத்தில் ஆணழகன்

அவன். சூரியனை போன்று தூய்மையானவன். அநியாயம் என்றால்

பொங்கி எழுவான் .அவள் எழிலின் கட்டிடத்திற்கு பக்கத்து வீட்டில்

 

உள்ளவன். சிறுவயது முதலே அவனை ஜன்னல் வழி ரசித்து

ஒருதலையாக காதல் கொண்டாள் பெண்ணிவள்.

ஆனால் அவனிடம் சொல்வதில் ஓர் தயக்கம் அவள் தன்னை

அசிங்கமாக பிற ஆடவர் போல் தூற்றிடுவானோ, இல்லை பிறர் போல்

உடலுக்காக பழகுவானோ என்று.எனவே இவள் காதல் தொலை தூர

ரசனைகளுடன் பயணித்தது. அன்று பூக்கடையில் அவனை கண்டு

தானும் பூ வாங்க கடைக்கு விழைகிறாள். அவன் ஸ்பரிசம் படும்

நிழலில் நின்று சிரித்து கொள்கிறாள்.

அந்நேரம் அக்கடைகாரன் ‘’சற்று விலகி போம்மா உங்களுக்கு இதே

வேலையா போச்சு. கோயில் வியாபாரத்தை கெடுக்காதே’’ என

நெருப்பை வார்த்தைகளாக்கி அவள் மீது கொட்ட அவள் கண்கலங்கி

ஒதுங்கி போக அவள் கைகளை ஓர் இரும்புகரம் பற்றியது. ஆம் அது

அவளவன் தான். இவள் விழிபிதுங்கி பார்க்க அவன் அவளை பார்த்து

‘’நீங்க வாங்க’’ என கூறி முதல்ல இவங்களுக்கு பூ கொடு என

கடைகாரனை மிரட்டும் தோணியில் கூற அவர் ‘’இல்லை சார் அந்த

பொண்ணு ஒரு’’ என கூறும் போது ‘’யாரா இருந்தா என்ன காசு

கொடுத்துதானே வாங்ராங்க குடு பூவ’’ என மிரட்ட அவரும் ஏதும்

கூறாமல் பூவை கொடுத்தார்.

எத்தனையோ ஆடவர்கள் தீண்டிய போது தோன்றாத ஓர் உணர்வு

அவன் இரும்புகரங்களில் அவள் உயிர் தொட்டு சிலிர்த்தது. உடனே

கோயிலுக்கு ஓடி சென்றவள் ஆண்டவன் முன் தன் அன்றாட

கண்ணீர்மழையை கொட்டிக் கொண்டு இருந்தாள்.

தன்னை பேரம் பேசும் அம்மா தப்பிக்க நினைத்தால் மிரட்டும் ஓர்

அதிசய அம்மா எத்தனை நாள் கெஞ்சியிருப்பேன் , இன்னும் எவ்வளவு

தழும்புகளை என்னுடல் தாங்கும் என அழுகிறாள் – இருப்பினும் ஓர்

 

நிம்மதியாய் என் கதிர் மட்டும். அவனிமும் என் காதலை உரைக்க

தைரியமில்லை. அவன் என் பாதுகாவலனாய் இருக்க மனம் ஏங்கி

தவிக்கிறது என தன் ஒரேஒரு தோழனான கடவுளிடம் புலம்பி

கொட்டுகிறாள். இது ஒன்றும் புதிதல்ல. அவள் கடந்த பத்து

ஆண்டுகளாக செய்வது தான்.

இன்று வீடு திரும்பும் போது வழக்கத்தைவிட சற்று நிம்மதியாக

துள்ளி குதித்து செல்கிறாள். அவளின் துள்ளலின் காரணம் அவனது

ஆதரவாக கூட இருக்கலாம். பகலில் அவன் நினைவுகளின் சுகமும்

இரவில் ஏற்கமுடியாத வலியும் அவளை கொன்றன.

இப்படியே நாட்கள் நகர அந்தநாள் வந்தது. அவன் பெண்களிடம் சீண்டி

விளையாடிய சில ஆண்அரக்கர்களை தெருவில் அடித்து புரட்டி எடுக்க

அதை விழிகளால் பருகி கொண்டே அவரை பார்த்தது

கொண்டிருந்தாள் இந்த செப்புநிலை

அப்போது கூட்டத்தில் ஓருவன் அவன் வயிற்றில் கூரிய கத்தி

கொண்டு தாக்க வர கதிரவனை உயிரில் சுமைக்கும் பேதையிவளோ

அந்த ஆயுதத்தை தன் காமப்பசிதீர்ந்த உடலிலே வாங்கி கொள்கிறாள்.

அவள் ரத்தம் வடிந்து அவள் உடலை பரிசுத்தமாக்க தன் கதிரவன்

மடிகளிலே மடிந்து வீழ்கிறாள் எழிலரசி.

தன் காதலை அவனிடம் உரைக்காமலே அவன் மடிகளிலே

மார்பினிலே தழுவி உதிரம் வடிய கிடக்கிறாள் அந்த ஓவியம்.

அவளின் காதல் ஏன் இப்படி அறியாமலே கண்ணீருடன் ஏன் இப்படி

செய்தாய் என அழுகிறான் கதிரவன். அவன் கண்ணீர் இவள்

நெற்றிகளில் வீழ தனக்கான மோட்சம் கிடைத்ததென அவன்

மார்பிலே உயிரை விடுகிறாள் எழிலரசி.விடியல் காணா தாமரை அதன் கதிரவன் மடிகளில் துயில் கொண்டது

நிரந்தரமாக. ஓர் விலைமதிப்பற்ற விலைமகளின் புனிதமான காதல்

அழகாய் மரணித்து போனது அவளுடன் சேர்ந்தே.

இது முகம் சுழிக்கும் பதிவு அல்ல. விலைமாது என்றால் காதல்

வரக்கூடாதா என்ன நியாயம் இது. உன்னுடையது தவிர வேறு யாரை

நீ காமுற பார்த்தாலும் நீயும் தவறாளவள் தானே. அவள் கள்ளகாதல்

கொள்ளவில்லை துரோகம் செய்யவில்லை. உடற்பசிக்காக வரும்

ஆண்களின் விற்பனை பொருளாகிறாள். விலைமகள் என்பவள்

சூழ்நிலைகளால் விற்கப்படுவள் . அவள் உடலை விற்பனைக்கு

காணும் எவரும் அவளின் உள்ளம் விற்பனைக்கானது அல்ல என்பதை

அறியார்.

Written By: –

 

 

 

 

Rtr. Balakrishnan Suhashini
(Senior Blog Team Member 2023-24)

Edited By:

 

 

 

 

Rtr. Naduni Premathilaka
(Senior Blog Team Member 2024-25)

Spread the love
guest


0 Comments
Inline Feedbacks
View all comments