வெள்ளி ஜிமிக்கி

அளவான கதி…
இளம் மஞ்சள் உடல் கொண்ட
தனியார் பேருந்து.
இதமான இடைக்கால சினிமாப் பாட்டு
சொர்க்கத்தைக் காட்டுது காதைத் தொட்டு
சாரதியின் பக்கத்தில் ஜன்னல் ஓரமாய் நான்-
சூரியனை
வழியனுப்பிவைத்து சிவந்து போகும் வான்

பாதையின் தூரத்தே ஓரமாய் நின்றவள்- தன்
வளையல் நிறைந்த கையை நீட்டி
மறித்தாள்.
அமர்முடுகி நின்றது பேருந்து- தலை குனிந்து ஏறினாள் அம் மாது அவள் குறித்து என் மனதில் பதிந்தது…
ஒன்று
ஊதா நிறப் புடவை
இன்னொன்று
அந்த வெள்ளி ஜிமிக்கி….

இரண்டாம் ஆசனம் தாண்டி வலப்புறம் திரும்பி
ஆசனம் ஒன்றை பிடிமானமாக பற்றி நின்றது- அக் கொடி
அனைத்து ஆடவர் கண்ணும் அவள் மீது
பாவை அவளோ பெண்களுக்கும் ஓர்
எடுத்துக் காட்டு
முன் பக்க கண்ணாடியால் பின் நின்ற அவளை
கண் வெட்டாமல் நிமிடத்திற்கு நிமிடம்
பார்க்கத் தவறவில்லை – நான்

காற்றிற்கு ஆடும் அதே வெள்ளி ஜிமிக்கி
காதோரமாய் அவள் சரிசெய்யும்
கலைந்த முடி
என் மனக் கவனம் கலைத்த கணம்

கத்தி விழியாள்!
கன்னியவள்- சாரதியின் கவனத்தையும்
கலைக்கத் தவறவில்லை.
சந்தியால் திரும்பியது பாரவூர்தி
கண நேர மோதல்……
உள்ளே சனங்களின் மரண கூச்சல்…

பேருந்தில் தொடர்ந்தும் ஒலிகிறது சினிமா பாடல்
கனவா?!
இல்லை!
ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது
கால் துண்டு பட்டது போல் வலிக்கிறது
சற்றே மயக்கத்துடன் கண் விழிக்கிறேன்

ஆம்புலன்ஸில் ஏற்ற என்னை தூங்குகிறார்
“எங்கே அந்த பெண்”
தேடியது என் இரு கண்
மீண்டும் ஒருமுறை பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கை

இதோ !
என்னை ஏற்றக் கொண்டு செல்கிறார்கள்
எங்கே உள்ளாய் கண்மணியே!

பார்தேன்!
அவள் என்னவானாள்?
தெரியவில்லை
பார்த்தது
நிலத்தில் களன்று வீழ்ந்திருந்த அவளின்
வெள்ளி ஜிமிக்கி…

Written by : 

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Jasotharan Gowrisangar
2nd place – Creative Content
Wordsville 2.0

Spread the love

1 thought on “வெள்ளி ஜிமிக்கி”

  1. கனகபுனிதராஜா ஸ்ரீகர்ஷன்

    அருமையான மொழிநடை
    தெளிவான கருத்து பகிர்வு
    கதைகளங்களை கண்முன்னே நிறுத்தும் பாங்கு அருமை

    வாழ்க வளமுடன் – தொடர்ந்து
    வரைக புந்துணர்வுடன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top