உலக உணவு தினம்
உலக உணவு தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உலக உணவு தினம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பசியை ஒழிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு ஒரு வலுவான குரலை வழங்குகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூற ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது …