எனது வீட்டின் படுக்கறையில் எனக்கும் என் தலையணைக்கும் தெரிந்த
என் காதல் கதை இது.எனது பெயர் ஆர்த்தி .வயது காதலுக்கு
பொருத்தமானதே. மென்மையான குணம் உடையவள்.எல்லோர் மீதும்
இலகுவில் நம்பிக்கை வைத்து ஏமாற்றப்படும் பெண்.யாரை நம்புவது
என்று தெரியாமல் குழம்பி
நிற்கும் நிற்கதியற்றவள். என் வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லை
தனிமை மட்டுமே நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். எனது
கடந்த காலம் எல்லோர் போலும் எளிதல்ல.தந்தை தன் சுயநலத்திற்காக
எங்களை தனியாக விட்டு விட்டு சென்று விட்டார். தாய் அதிலிருந்து
கண்டிப்பாக இருக்கிறார்.பாசத்திற்கு ஏங்கும் பெண்.என் உலகமே என்று
நினைத்த எனது பாட்டி இந்த பூமியில் இருந்து விடுபட்டார் அதிலிருந்து
நான் விடுபடவே இல்லை இதுவரையும்.இந்த உலகத்தை வெறுக்கும்
பெண்.ஆனால் உலகத்தை வேறு வடிவில் பார்க்க வேண்டும் என்று
உணர்த்தியவன் என்னவன். அவன் பெயர் சித்தார்த்.அவன் என் வாழ்வில்
வந்த வரம். சிறு விடயங்களில் கூட அழகை ரசிப்பவன். என்னவனை
பார்த்த பொழுது கூறுகிறேன்.ஊரில் உள்ள அனைத்து இளம்பெண்களுக்கும்
அவன் மேல் crush. அவன் அவ்வளவு அழகாக இருப்பான்.அன்றொரு நாள்
எனது தாத்தா இறந்து விட்டார்,நான் என்ன செய்வதறியாது திகைத்து
நின்று கொண்டிருந்தேன். இது உண்மையா? என்று எனக்கு புரிய நேரம்
எடுத்தது. என்னால் தாங்க முடியாத மரண வலி அது. அப்போதுதான்
என்னவனை முதல் தடவை பார்த்தேன்.என்னை அவ்வளவு காதலோடு
பார்த்தான். அவன் கண்களில் அவ்வளவு காதல் வெளிப்பட்டது.
நான் அழும் போது என்னை ஆறுதல் படுத்தி சமாதானம் செய்ய அவன்
கண்கள் ஏங்கியது.
எனக்கு காதல் மீது நம்பிக்கை இல்லை.நான் எனது தாத்தாவின் மறைவை
எண்ணி வேதனையில் மட்டுமே இருந்தேன். ஆனால் அவன் என்னை
பார்த்த விதம் என் மனதில் பதிந்து இருந்தது இந்த உலகில் எதையும்
நம்பாத பெண்ணாயிற்றே. இதுவும் கற்பனை என்றே கடந்து
விட்டேன்.ஆனால் இந்த பிரபஞ்சம் உனக்கு அவன் தான் என்று முடிவு
எடுத்து விட்டது போல அவனை நான் சந்திக்கவே கூடாது என்றாலும்
ஆண்டவன் விட்டு விடுவதாக இல்லை.
என்னவன் என்னிடம் காதல் சொன்ன விதமே அழகு. அன்றொருநாள் என்
மன நிம்மதிக்காக கோவில் செல்லும் போதும் எதிர்பாராத விதமாக
சந்தித்தோம்.சித்தார்த் என்னிடம் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு எதையோ
உணர்த்துகிறது அது புரிகிறதா? என்று வினவினான்.நான் என்று இவன்
தன் காதலை கூறப்போகிறான் என்பதை உணர்ந்து அவனிடமிருந்து விலக
முயற்சி செய்தேன். ஆனால் அவனால் விட்டுவிடுவதாக
இல்லை.ஆர்த்தி,"நீ வாழும் காலத்தில் உன்னோடு நான் என்றும் இருக்க
விரும்புகிறேன்" என்றான்.அவன் கண்களில் நான் இல்லாத வாழ்க்கையை
அவனால் ஜீரணித்து கூட பார்க்க முடியாது என்று உணர்ந்தேன். நான்
இனி வாழும் ஒவ்வொரு நொடியும் உன்னுடன் பயணிக்க விரும்புகிறேன்
என்றான்.எனக்கு இதெல்லாம் கனவு போல இருந்தது.சித்தார்த் என்னை
பார்த்து உன் பார்வையிலேயே எனக்கு பதில் கிடைத்துவிட்டது என்று
சிரித்துக் கொண்டு சென்று விட்டான்.அன்றிலிருந்து இருளாகிய என்
வாழ்வு வெளிச்சத்திற்கு வந்தது.
ஆனால் என் மனதிற்குள் ஒரு கேள்வி இவன் என்றாலும் என் வாழ்வின்
இறுதிவரை தொடர்வானா? என்று குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் என்னவனோ அனைத்து குழப்பங்களையும் தகர்த்து எறிபவனாக
இருந்தான். அவன் என்னை பார்க்கும் விதம்,பேசும் விதம் நான் அவன்
மனதில் எவ்வாறு குடியிருக்கிறேன் என்று எனக்கு ஒவ்வொரு தடவையும்
ஆழமாக உறுதியளித்துக் கொண்டே இருந்தது. நான் தவறுகள்
செய்யும்போது கூட என்னை கண்டிக்காமல் என்னை பொறுமையுடன்
கையாளும் என்னவன் எனக்கு கிடைத்த வரம்.
நான் என்றும் உன்னுடன் என்ற உறுதியில் நம்பிக்கை வைத்து,
சித்தார்துடன் என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அது ஒரு புதிய
பயணம். எப்போது எங்கும் செல்ல, எப்போது எங்கும் போக, எனக்கு
அவனுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எனது உள்ளத்தில்
வலுப்பெற்றது. அவன் என் மனதில் ஒரு புதிய கதையை எழுதத்
தொடங்கினான்.எனது வாழ்வின் ஒவ்வொரு நொடியும், அவனுடன், காதல்,
நம்பிக்கை, உறுதி என்ற அழகான உணர்வுகளுடன் நிரம்பியது. நான்
நினைத்தேன், உலகத்தை வெறுக்கும் பெண், இன்று புதிய உலகத்தை,
புதிய காதலை, புதிய உறவை கடந்து, என்றும் உன்னுடன் என்ற
உறுதியுடன் வாழத் தொடங்கினேன்.இப்போது, நான் முழுமையாக சித்தார்துடன் என் வாழ்க்கையை இனிதாக
தொடங்கியுள்ளேன். எது நடந்தாலும், எவ்வளவு பெரிய சவால்கள்
வந்தாலும், என்றும் உன்னுடன் என்ற உறுதி என் இதயத்தில் ஒரு
நிலையான உறுதியாக மாறியுள்ளது.
காதல் என்பது எந்தவொரு குழப்பத்திலிருந்தும், உங்களை உறுதியாக்கி,
புதிய
உலகத்தைகாட்டும் ஒரு அழகான பயணமாகும்.
எனக்கும் என் தலையணைக்கும் தெரிந்த கதை……… இப்போது
உங்களுக்கும்.
Written By: –
Darmika Savunthararasa
Edited By: –
Rtr. Naduni Premathilaka
(Senior Blog Team Member 2024-25)