பல காரணங்களினால் எங்கள் நாட்டு இளைஞர்களுடைய மனநலமானது தற்போது பாதிப்படைந்துள்ளது . எமது நாட்டில் பல மனநல சுகாதார நிகழ்ச்சிகள் நடைபெற்றுவந்தாலும் இலங்கையில் நிலவிய பாதிப்புக்களினால் அவை பயனற்று காணப்படுகின்றன. மன நலம் பாதிப்படைந்தமைக்கான கரணங்கள் சிலவற்றை இங்கு கலந்துரையாடுவோம்.
- இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தற்போது தாய், தந்தை இருவரும் வேலைக்கு செல்லும் கட்டாயம் நிலவியுல்லமையினால் பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பு குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக இளைஞர்கள் மன நலம் பாதிப்படைந்து அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அவர்களை அரவணைக்க, பாதுகாக்க, அன்பாக தொடர்புகொள்ள அவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் பெற்றோர்கள் அருகில் இல்லாதமையினால் அவர்களின் உணர்வை
வெளிபடுத்த தவறுகின்றனர். இதனால் மனதளவில் பாதிக்கபட்டு தவறான முடிவுகளில் ஈடுபடுகின்றனர். இன்றைய காலத்தில் இளைஞர்களின் இறப்பு வீதம் அதிகரித்து
வருவதற்கான காரணமும் இதுவேயாகும். அவர்களை அரவணைப்பது பெற்றோர்களின் கடமையாகும்.

- சமூக வலைத்தளங்களானது தற்காலத்தில் மாணவர்களிடையே பாரிய பாதிப்பை ஏற்படுதியுள்ளது. அதிலும் TikTok,Instagram,Facebook போன்ற வலைத்தளங்களானது
பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் அதிலிருந்து பயனை பெறுவதை விட பயனற்ற மற்றும் தீய விடயங்களை நாடுவதையே அதிகம் விரும்புகின்றனர்.
வலைத்தளங்களை பயன்படுதுவதன் மூலம் இளைஞர்கள் மற்றவர்களோடு தம்மை தாழ்த்தி ஒப்பிடுக்கொள்கின்றனர், சூது விளையாட்டுக்களிற்கு அடிமையாகின்றனர்,
துஷ்பிரயோகங்களிதற்கு ஆளாகின்றனர். இதனால் மனதளவில் பலவீனமுறுவதுடன் மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர். இதனை தடுக்க இளைஞர்கள் சுய ஒழுக்கதை
பேணுவதும், சுய கட்டுப்பாட்டை உருவாக்குவதும் முக்கியமாகும்.
- இலங்கையில் அடுத்தடுத்து உருவாகிய இயற்கை அனர்த்தங்கள் யுவதிகளிடையே மனதளவில் பாதக தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. Covid-19 தாக்குதல்,
வெள்ளப்பெருக்கு, சுனாமி போன்ற காரணத்தினால் தங்களது சொத்துக்களை இழந்து, உறவுகளை இழந்து, தங்களுடைய பிரச்சினைகளை கூறமுடியாமல் மனதளவில்
காயமுறுகின்றனர். பெற்றோர்கள், உறவினர்கள் கண்முன்னே இறப்பதும் தங்களுடைய சொத்துக்கள் இழப்பதையும் கடந்து வந்தவர்களில் இளைஞர்களே ஆழமாக
பாதித்துள்ளனர் .
- இலங்கை கல்வி ஒழுங்கமைப்பில் கணப்படுகின்ற சிக்கற்தன்மை மிக முக்கியமான காரணமாகும். சாதாரணதர கல்வி, உயர்தர கல்வி போன்றவற்றில் காணப்படுகின்ற
உயர் போட்டிதன்மை மற்றும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்படுத்தபடுகின்ற மன அழுத்தங்கள் , பரீட்சையில் சித்தியடையாமையினால் ஏற்படுகின்ற பயம்,
வரையறுக்கபட்ட வாய்ப்புக்களும் அதிகரிக்கின்ற போட்டிதன்மையும் மன நல சுகாதாரத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தபடுகின்றது.
இன்றைய சமூக மாற்றங்கள், கல்வி அழுத்தங்கள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் சமூக ஊடகத் தாக்கங்கள் காரணமாக இலங்கை இளைஞர்களிடையே
மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. மனநலம் என்பது உடல் நலத்தைப் போலவே முக்கியமானது என்பதைக் அனைவரும் உணர வேண்டும்.
மனநலப் பிரச்சினைகள் பலவீனம் அல்ல; அவை சரியான ஆதரவு, புரிதல் மற்றும் சிகிச்சை மூலம் தீர்க்கப்படக்கூடியவை.
இளைஞர்களின் மனநலத்தை பாதுகாப்பதற்கு குடும்பம், கல்வி அமைப்புகள், சமூகம் மற்றும் அரசு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மனநல
விழிப்புணர்வை அதிகரித்து, திறந்த மனதுடன் பேசும் சூழலை உருவாக்கினால், ஆரோக்கியமான சிந்தனை கொண்ட, தன்னம்பிக்கையுடன் நிறைந்த இளைஞர் சமூகத்தை
உருவாக்க முடியும். இளைஞர்களின் மனநலம் பாதுகாக்கப்பட்டால், இலங்கையின் எதிர்காலமும் உறுதியாகும்.

Written By: –

Rtr. Ilaxshana Rajeshkanth
(Junior Blog Team Member 2025-26)
Design By: –

Rtr. Pravena Rajkumar
( Junior Blog Team Member 2025-26)

