ஜூலை 7 ஆம் தேதி, உலகளாவிய ரீதியில் சாக்லேட் பிரியர்கள் ஒன்று கூடி உலக சாக்லேட் தினத்தை கொண்டாடுகிறார்கள். இந்த ருசியான தினமானது உலகில் உள்ள அனைத்து வயதினரும் அனுபவிக்கும் மிகவும் விருப்பமுள்ள இனிப்பான சாக்கலேட்டை கொண்டாடுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அதன் வரலாற்றிலிருந்து நவீன கால முக்கியத்துவம் வரை, சாக்லேட் உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.சாக்லேட்டின் சுருக்கமான வரலாறு
சாக்லேட்டின் பயணம் பண்டைய மெசோஅமெரிக்காவில்(Mesoamerica) தொடங்குகிறது, அங்கு மாயா(Maya) மற்றும் அஸ்டெக்குகள்(Aztecs) போன்ற நாகரிகங்கள் கொக்கோ மரங்களை பயிரிட்டதுடன் அதன் விதைகளை(beans) மதிப்புமிக்க நாணயமாக கருதினர். மதச் சடங்குகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது ரசிக்கும் கசப்பான, நுரைத்த பானத்தை உருவாக்க கொக்கோ பீன்ஸ் பயன்படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகுதான் சாக்லேட் இன்று நமக்குத் தெரிந்த இனிப்பு மிட்டாய்களாக மாறத் தொடங்கியது.19 ஆம் நூற்றாண்டில், சாக்லேட் உற்பத்தியில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் திடமான சாக்லேட் பார்களை உருவாக்க வழிவகுத்தன மற்றும் உலகளவில் பிரபலமான விருந்தாக சாக்லேட் பரவியது. இன்று சாக்லேட் பார்கள் மற்றும் உணவு பண்டங்கள் முதல் சூடான கோகோ மற்றும் சாக்லேட் சிற்றுண்டிகள் வரை எண்ணற்ற வடிவங்களில் உட்கொள்ளப்படுகிறது.கலாச்சார முக்கியத்துவம்
சாக்லேட் வெறும் விருந்தாக மட்டுமல்லாமல் மாறிவிட்டது; இது உலகெங்கிலும் உள்ள மரபுகள் மற்றும் கொண்டாட்டங்களில் ஆழமாக பதிக்கப்பட்ட ஒரு கலாச்சாரமாக உள்ளது.மேற்கத்திய கலாச்சாரங்களில், சாக்லேட் என்பது காதலுக்கு ஒத்ததாக இருக்கிறது, இது பெரும்பாலும் காதலர் தினத்தில் பரிசாக பரிமாறப்படுகிறது. ஜப்பானில், காதலர் தினத்தன்று சாக்லேட் கொடுப்பது ஒரு வழக்கமான நடைமுறையாகும், பெண்கள் பாசத்தின் அடையாளமாக ஆண்களுக்கு சாக்லேட்டுகளை வழங்குகிறார்கள்.மேலும், பல்வேறு கலாச்சார மற்றும் மத விழாக்களில் சாக்லேட் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, மெக்சிகன் விடுமுறை தினமான டியா டி லாஸ் மியூர்டோஸ் (Dia de los Muertos) இறந்தவர்களின் நாளின் போது, இறந்த அன்புக்குரியவர்களைக் கௌரவிக்கும் வகையில் சாக்லேட் அடிக்கடி சேர்க்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் சாக்லேட் பிரதானமாக உள்ளது.
Written By: –
Rtr. Subahari Kugathasasarma
(Blog Team Member 2024-25)
Edited By: –
Rtr. Nethmi Vitharana
(Blog Team Member 2024-25)