தைப்பொங்கல் என்பது தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சந்திர மாஸ (சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் போது) வரும் பொங்கல் பண்டிகை, பசு, நிலம், விவசாயம் மற்றும் பணியாளர்களின் களஞ்சியத்தை போற்றும் நாளாகும்.பொங்கல் பண்டிகையானது உழவர் திருநாளாக தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது
💫பொங்கல் பண்டிகை உருவான கதை:
பொங்கல் பண்டிகையின் தோற்றமானது எப்போது உருவானது என்று சரியாக தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. இதற்கு என்ன பொருள் என்றால் ஆண்டினுடைய முதல் அறுவடை என்று அர்த்தமாம். உழவர்கள் தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பின்னர் இதுதான் பொங்கல் பண்டிகையாக மாறியது என்று கூறுகிறார்கள்.
💫தைப்பொங்கல் சிறப்பம்சங்கள்.
1.புத்தாண்டு பிறப்பு: தை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகும். புதிய அறுவடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த நாள், விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானது.
2.நன்றி செலுத்தல்: விவசாயிகள் தங்கள் உழைப்பிற்கும், இயற்கையின் கொடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
3.கோலம் அலங்காரம்: வீடுகளில் வண்ணமயமான கோலங்கள் வரையப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. இது வீட்டிற்கு மங்களகரமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
4.பண்டங்கள் பரிமாறல்: உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் பண்டங்கள் பரிமாறிக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.
5.பொங்கல் வழிபாடு: புதிய அரிசியைப் பயன்படுத்திப் பொங்கலிட்டு, அதை சூரியனுக்கு காணிக்கையாக வழங்கி வழிபாடு செய்வது முக்கிய அம்சமாகும்.
💫தைப்பொங்கலின் சிறப்பு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தின் ஒரு முக்கியமான பகுதி. இது சமூக ஒருங்கிணைப்பு, இயற்கையின் பாதுகாப்பு மற்றும் அன்பு ஆகியவற்றை உலகிற்கு காட்டுகிறது.
தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றி நிற்கும் திருநாளே தமிழர் திருநாள் ஆகும். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்ˮ என்ற திருமூலரின் வாக்கிற்கிணங்க அர்த்தம் தரும் பண்டிகையாகும்.
உழைப்பின் பயனை நினைவுகூர்ந்து மற்றவர்களுக்கும் பகிர்ந்துண்டு இயற்கையை நினைவுகூர்ந்து இயற்கையைப் போற்றி வாழ்வது சிறந்த வாழ்க்கை என்பதை நம் முன்னோர்கள் தமிழ் திருநாளில் நமக்கு உணர்த்தி உள்ளனர். இப் பெருமையை நாமும் உணர்ந்து வாழ்வில் சிறப்போம்.
தைப்பொங்கல் நம் வாழ்வில் புதிய பொன் காலங்களை கொண்டு வரட்டும்!
Written By: –

Rtr. Darmika Savunthararasa
(Junior Blog Team Member 2024-25)
Edited By: –

Rtr. Quency Kananathan
(Junior Blog Team Member 2024-25)

