பொறுத்தது போதும் பொங்கியெழு
அரிவையென்றால் அறிவை மற தெரிவைப் பெண்ணே தீண்டாதே மங்கை நீயும் மனையில் கிட மடந்தை யென்றால் மடிந்து நட பெதும்பை ஆயின் உரிமை மற பேரிளம் பெண் ஆனாலும் நிம்மதி இல்லை அவள் வாழ்வில் ஏழு பருவப் பெண்டிருக்கும் ஏட்டில் எழுதா விதியாக வழங்கி வந்த வரங்கள் இவை வரலாறு நெடுகிலும் வஞ்சியரை வஞ்சித்து வந்தனர் வழி வழியாய் கன்னியின் கருவினில் உதித்து மங்கையின் மடியில் மிதந்து அவளின் கையாலே உண்டுடுத்து அவளையே தாழ்த்தி வைக்கும் ஆணினம். …